top of page

எங்கள் சேவைகள்

அங்கீகாரம் மற்றும் மரியாதைக்குரிய சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் அனைத்து மலேசியர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேம்படுத்த முயற்சி செய்கிறோம். எங்களின் ஈடுபாட்டுடன் கூடிய பட்டறைகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம், நமது சமுதாயத்திற்கான ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதையும், நமது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அந்தர் யோகம்

வாராந்திர அந்தர் யோகம், அருளொளி பிரார்த்தனை & சன்மார்க்க சத்சங்கம். அருளொளி தியான மையம், குவாந்தான் மற்றும் நிகழ்நிலையிலும் நடைபெறும்.

Meditate at the beach

அருள் அரிசி

ஜீவகாருண்யம் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சமையல் பொருட்கள் தானமாக வழங்கப்படுகிறது.

அருளொளி யோகாசனம்

நிகழ்நிலையிலும், நேருக்கு நேராகவும் ஒவ்வொரு வாரமும் யோகாசன வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும், 6 மாத காலத்திற்கு யோகாசன முகாம் கல்வியமைச்சின் ஆதரவோடு மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றது.

அருளொளி இளையோர் தலைமைத்துவம் மற்றும் தன்முனைப்பு முகாம்

கல்வியமைச்சின் ஆதரவோடு இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி.

Perinba Kural_logo-01_edited_edited.png

பேரின்பக் குறள் 

அருளொளி மார்க்கத்தின் படிப்பினையை மாணவர்களுக்கான போட்டியாக நடத்தப்படுகின்றது.

அருள் அமுது

அபர ஜீவ காருணியம்' மற்றும் 'பர ஜீவ காருணியம்' அடிப்படையில் ஸ்ரீ சத் சித்ரமுத்து அடிகள் அவர்கள் கற்பித்த வழியில் இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது.

அருளொளி மகளிர் தலைமைத்துவம் மற்றும் தன்முனைப்பு முகாம்

மகளிர் மேம்பாடு பற்றிய பல்வேறு பயிற்சிகள் ஆண்டு முழுவதும் தொடராக வழங்கப்படும்.

மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்தின் சுவடுகள்  
(ஜன 2019 - செப் 2023) - ஓர் பார்வை 

bottom of page