top of page
Screenshot 2023-08-10 122433_edited.png

அமைப்பின் உள்ளகம்

1.png
Rain Flowers_edited.jpg

நமது இலட்சியம்​

ஆழிசூழ் உலக மெல்லாம் அமைதிமேவ
ஆகாத பகை யொழிந்து அன்புண்டாக
ஆராத கவலை பிணி அகன்று போக
ஆக்கமொடு மக்கள் குலம் அழகாய் வாழ
ஆண்டவனை வேண்டுதல் செய்து அருளைநாடி
ஆனந்த தவநிலையை அணுகுவோமே !

செல்லல் நிகழல் வருங்காலம் மூன்றினையும் சொல்லுமே மெளனத் தொழில் !

சின்னம்

ஆனை முகம் - மனம் ஆணவம் மிக்கது, மந்த தன்மை உள்ளது. ஆனால் அடக்கி ஆளும்பொழுது வலிமையைச் சரியான கோணத்தில் கொண்டு செல்ல வல்லது. 

இடது காதில் பிறை - சந்திர கலை (16) யைக்  குறிக்கும். 

வலது காதில் சூரியன் - சூரிய கலை (12) யைக்  குறிக்கும். 

தும்பிக்கையில் சக்கரங்கள் - பாம்புபோல நெளிந்த தும்பிக்கை பாம்பென உருவாக்கப் படுத்திய குண்டலினியையும் அதன் 7 சக்கரங்களையும் குறிக்கும். 

நெற்றிப்  பொட்டில் வர்ண சக்கரம் - “வட்டங்கள் ஏழு மலர்ந்திடும் உம்முள்” (திருமந்திரம்    பாடல் – 768) கண்மணி வட்டம் உள் ஒளியை எண்ணி தவம் செய்யும்போது மும்மலத்திரைகள் வள்ளலார் சத்திய ஞான சபையில் காட்டிய ஏழு வர்ணங்கள் (கருப்பு திரை, நீலத் திரை, பச்சை திரை, சிவப்பு திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரை) விலகினாலே ஆத்ம ஜோதியான அருளொளி தரிசனம் செய்ய முடியும் என்பதனை குறிக்கும்.

 

தலைமேல் நடராஜர் - திருவடி தரிசனம், திருச்சிற்றம்பல தரிசனம் மற்றும் நடராஜ தத்துவங்களைக் குறிக்கும்.

ARULOLI MALAYSIA
Swirl

பேரின்பக் குறள்

Swirl

அன்பு

அறநெறி பின்பற்றி உலகில் உளவரையும் 
பிறர்நலனைப் பேணியுலவு.
(47)
Swirl

அறம்

வறுமைபிணி நீங்குமாறு மனதிளகித்
திருவளர நற்சேவை செய்.
(49)
Swirl

கிருபை

நெற்றிக்கண்ணைத் திறந்து நிமலன் ஒளிவடிவை
உற்றுப்பாரென்பர் குரு. (88)
Swirl

ஞானம்

தனிமுதல்வனே தானதாகி சைதன்யமய
இனிதுலகிலென்றும் இருப்பர்.
(104)

கொடி விளக்கம்

ARULOLI MALAYSIA

காவி நிறம் - ஞானம் அடைய வேண்டி இருக்கக்கூடிய சித்த வைராக்கியத்தை குறிப்பதாகும். சித்த வைராக்கியத்தில் புனிதம், நற்பண்பு, ஞானநிலை மற்றும் தன்னலமற்ற சேவைகள் ஒருங்கே அடங்கும்.

மஞ்சள் (கால் பங்கு) வெள்ளை (முக்கால் பங்கு) நிறம் - வள்ளலார் நிறுவிய சன்மார்க்க கொடியினை குறிக்கும். ஆன்மாவானது கால் பங்கு மஞ்சளும் முக்கால் பங்கு வெண்மையும் கலந்த நிறம் என வள்ளலாரின் திருவாக்கிலிருந்து அறிந்து கொள்கிறோம். ஆக, சனாதன தர்ம கொள்கை மற்றும் அதன் தத்துவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சித்த வைராக்கியத்துடன் செயல்படுவதுமில்லாமல் ஞானம் அடையச் சன்மார்க்க விதிகளைச் சிரம் மேற்கொள்ள வேண்டும். கொடி என்றால் என்ன? கொடி என்றால் உயிர் காற்று என்பதாகும். உயிர் காற்று இயங்காமல் இருக்கக் கொடி கட்டிக் கொண்டார் வள்ளலார். உயிர் இயங்க பிராணவாயு என்னும் காற்று வேண்டும். இந்த உலகில் பிராணவாயு என்னும் காற்று இல்லை என்றால் உயிர் இயங்காது. அந்தப் பிராணவாயுவை நிறுத்தி அமுதம் என்னும் அமுதக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விட்டார் வள்ளலார்.

bottom of page